November 14, 2007

தென்கிழக்கு ஆசியாவின் சீனப் பெரிய மனிதர்கள்

How a few superrich tycoons dominate S.E. Asia economy
சீனா பற்றிச் சில பதிவுகள் முன்னால் போட்டிருக்கிறேன். பார்த்திருப்பீர்கள். இது புலம் பெயர்ந்து ஆசியாவில் பல பகுதிகளில் இருக்கும் சீனர்களையும் அவர்களில் சில பெரு 'நாயகர்'களையும் பற்றியது. கட்டுரையாளர் ஜாக்கிரதையாக எதையும் அச்சு பிச்சென்று சொல்லாமல் அதே நேரம் நம் ஊகத்திற்கு விட்டுச் சீன முதலாளிகள் எப்படி நிழலும் இருட்டுமான இடத்தில், நேரத்தில் வாழ்ந்தபடி பெரும் சொத்துக்களைச் சேர்த்திருக்கிறார்கள் என்று விளக்குகிறார்.
பிரிட்டிஷார் வருமுன், அரபியர்கள் வருமுன் ஆசியாவில் பெரும் கடல் வணிகராக இருந்தவர்கள் சீனரும், தமிழரும், ஒரு சில இந்தியரும். ஏன் சீனர், இந்தியர் கடல் வணிகத்தை விட்டொழித்தனர், கடல் பகுதிகளை ஏன் அராபியக் கொள்ளையருக்கும், பின் பிரிட்டிஷ், யூரோப்பியக் கொள்ளையரிடமும் கைவிட்டுப் பின் ஒதுங்கித் தம் நாட்டின் சுதந்திரத்தையே இழந்து நின்றனர் என்பதெல்லாம் வரலாற்றாசிரியர்கள் இன்னமும் விடை காண முயலும் அவலங்கள்.
இதில் சீனாவை விட இந்தியா இழந்தது ஏராளம். சீனர்களுக்கு எல்லாமே நஷ்டமாகிப் போய் விடவில்லை. ஐரோப்பியர் பகுதிகளாகச் சீனாவைக் கைப்பற்றினர், ஜப்பானியரும் ஒரு பெரும்பகுதி சீனாவைக் கைப்பற்றினார் என்றாலும், சீனா பல பகுதிகளில் இன்னமும் தன் சுதந்திரததைக் காப்பாற்றி இருந்தது. இந்தியாதான் முழுதும் தன் மக்களின் சுதந்திரத்தை இழந்து காலனி நாடாகியது.
இந்திய நண்டுகள் அன்றும் சரி, இன்றும் சரி சக இந்தியரைக் கீழே இழுத்து விட்டு யாரும் அடிமைத்தனத்தில் இருந்து தப்பாமல் கூண்டோடு அடிமையாக இருக்க வைப்பதில் வல்லவர்.
யார் யார் எப்படி இந்தியாவை இன்றும் அடிமை நாடாக்குவதற்குத் துடிக்கிறார் என்று முன்னால் பல பதிவுகளில் போட்டு விட்டதால் இங்கு திருப்பி எழுதாமல் விடுகிறேன். நான் இப்பதிவுகளில் இந்திய தேசியவாதிகளுக்குப் பயன்படும் பதிவுகளாகத்தான் தொடர்ந்து போட முயல்கிறேன். நீங்கள் படித்துப் பலரிடமும் இந்தத் தகவல்களைப் பரப்புங்கள். தம் வாழ்வைத் தாமே முயன்று மேலாக்கும் இந்தியர்தான் இனி இந்தியாவைக் காப்பாற்றி நாடும் மக்களும் வளமாக இருக்க வைக்க முடியும்.

சீனர்களில் பலர் ஆசியாவில் இன்று பெரும் முதலாளிகளாகவும் தொழிலதிபர்களாகவும் வங்கி, இன்சூரன்ஸ், ஏற்றுமதி இறக்குமதி, பயண ஏற்பாடு நிறுவனங்கள், என்று பெரும்பகுதி வர்த்தக, தொழில் துறைகளைத் தம் பிடியில் வைத்திருக்கின்றனர். இந்த புலம் பெயர்ந்த சீன முதலாளிகளிடம் இருந்து ஏராளமான முதலீடு கம்யூனிஸ்டு சீனாவில் போய் இறங்கி இருப்பதை இந்திய கம்யூனிஸ்டுகள் எதுவுமே தெரியாதது போல மக்களுக்குத் தெரியாமல் மறைத்து விடுவார்கள். அது ஏன் என்று பிற்பகுதியில் சுருக்கமாக விளக்கி இருக்கிறேன்.

எப்படி ஸ்டாலின் கொள்ளை, கொலை எல்லாம் செய்து, தொழிற்சாலைகள், மேலும் வியாபாரத் தலங்களுக்கெல்லாம் தீயிட்டு அழித்து உள்ளூர் மாஃபியா போலச் செயல்பட்டுத் திருடியதை அன்றைய லெனினியக் கம்யூனிஸ்டு கட்சிக்கு நிதியாகக் கொடுத்து லெனினுக்கு அவசர நிதி உதவியைச் செய்து பிரதி பலனாகக் கட்சியின் அதிகார மையத்துக்குப் போய்ச் சேர்ந்தாரோ அதே போல இந்த சீன முதலாளிகள் சீனா மாவோவின் பெரும் மூடத்தனமான பண்பாட்டுப் புரட்சி, மேலும் பெரும்பாய்ச்சல் முயற்சிகளெல்லாம் சீனாவை நொண்டி நாடாக ஆக்கி மக்கள் ஈக்களைப் போலச் செத்து மடியும் நிலையில் வைத்ததால், சீனக் கம்யூனிஸ்டு கட்சி நாடு நாடாகக் கப்பரை ஏந்தி நிற்காமல் காப்பாற்றி பெரும் நிதியைச் சீனாவில் முதலீடு செய்ய முன்வந்தனர்.

அதற்கு ஈடாகத்தான் டெங்க் ... பெங் அன்னியச் சீன முதலாளிகளுக்குப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்க அனுமதி தந்து சீனப் பொதுவுடைமைக் கட்சியின் அதிகாரிகளுக்கும், சீன ராணுவத்தின் அதிகாரிகளுக்கும் நாட்டுப் பொருளாதாரத்தை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் கொள்ளை அடித்துத் தாமும் பெருந்தனக்காரர்களாக வாய்ப்புத் தந்ததாகப் பல சீனா பற்றிய தற்கால நூல்கள் சொல்கின்றன.
அவை என்னென்ன சொல்கின்றன என்பதைப் பிறிதொரு சமயம் பார்ப்போம். இந்தக் கட்டுரையில் என்ன முக்கியமாகச் சொல்லப் பட்டிருக்கிறது என்று கவனிப்போம்.

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மலேயாசியா, மேலும் ஹாங்காங் ஆகிய பகுதிகளில் ஆளும் குழுக்களுக்குக் கையூட்டுகள் கொடுத்து ஒப்பந்தம் வைத்துக் கொண்டு பல துறைகளில் ஏகபோக உரிமைகளைப் பெற்று அந்நாட்டு மக்களுக்கு எந்த உதவியோ, வளமோ சேராமல் தாம் மட்டும் கொழுத்து வளர்ந்தனர் இந்த முதலாளிகள்/ நிறுவனங்கள் என்கிறார் இந்த ஸ்டட்வெல் என்கிற ஆய்வாளர். 20 ஆண்டுகள் இந்த இடங்களில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்ர். இவர்கள் 'அனைவரும்' குற்றம் செய்து இத்தனை கொழிப்பை அடையவில்லை என்றாலும் அனேகர், பல நேரம் பலவகைச் சட்ட விரோதமான செயல்கள் செய்துதான் செல்வம் திரட்டினார் என்கிறார்.
போதைமருந்து, ஆயுதங்கள் மேலும் மக்களைக் கூடக் கடத்தி இருக்கிறார்கள் இவர்கள். சீனக் குற்றவாளிக் கூட்டங்கள், இந்தோனேசியாவின் குற்றப் பரம்பரைகள் ஆகியோருடன் இவர்களுக்கு உற்ற உறவு என்கிறார். ஹாங்காங் ஏதோ சுதந்திர சந்தை உள்ள இடம் என்ற பிரமை பொதுவில் உலவுகிறது, ஆனால் அங்கு பெரும்பாலான பொருளாதார நடவடிக்கை இந்த சில பெருமுதலாளிகளின் கையில்தான் உள்ளது என்கிறார். ஹாங்காங்கில் உள்ள பெருமுதலாளிகள் செஞ்சீனாவின் ஏற்றுமதி மையங்களில் பெரும் முதலீடு செய்துள்ளனர் என்பது விஷயம் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.
நம் ஊர் காய்ந்த மிளகாய் மாவோயிஸ்டுகள் தமிழ்ப் பத்திரிகைகளிலும், வலை மையங்களிலும் ஏன் தெருக் கூட்டங்களில் கூட 'சீனா யாரையும் சுரண்டாமல் தனியொரு நாடாக மக்களெழுச்சி மூலமாக கம்யூனிஸ்டு சித்தாந்தத்தின் மேன்மையால் பெரும் வளத்தை அடைந்து விட்டது, நாமும் புரட்சி நடத்தி (பல கோடி மக்களைக் கொன்று குவித்து ரத்த ஆறை நாட்டில் ஓட விட்டு) இப்படிப் பெரும் வளம் பெறுவோம, அதற்கு முன் ஏற்பாடாக இந்திய முதலாளிகளுக்குச் சமாதி கட்டுவோம்' என்று திகிலூட்டும் கருத்துகளால் மக்களுக்கு காதில் ஜிகினா சுற்றி விற்றுக் கொண்டிருக்கின்றனர். மக்களுக்கும், ஏமாந்த இளைஞர்களுக்கும் திருவிழாவில் அண்ணாந்து பார்த்து ஏமாறத் தயாராக இருக்கும் சிறுவனுக்கு கிலுகிலுப்பையைக் கொடுத்து, கைமோதிரத்தைத் திருடும் கள்ளனை ஒத்தவர்கள் இவர்கள். இம்மக்கள் ஏமாந்தாலோ அவர்களில் மூன்று நான்கு தலைமுறைகளை சீனாவுக்கும் சீனப் பண முதலைகளுக்கும் அடிமையாகிப் போவார் என்பது தெளிவு. ஒரு பெரும் சதித் திட்டம் இது என்பது இத்தனை நேரம் வாசகருக்குத் தெரிந்திருக்கும்.
இந்தச் சதிகாரர்கள் தம் பொய்க் கனாக்களை நம்புகிறாரென்றால் முதலில் தாம் போய் சீன முதலைகளுக்கு அடிமைகளாகச் சில வருடங்களாவது ஏவல் செய்யட்டும், பிறகு என்ன சொல்கிறாரென்று பார்ப்போம்.
ஆனால், இந்திய மக்களை அவர் கடும் துன்பங்களுக்கப்பால் வென்ற சுதந்திரத்தை அம்மக்கள் விருப்பப்பட்ட வழியில் அனுபவிக்க விடட்டும் என்று நாம் வலியுறுத்திச் சொல்லுவோம்.
சூ.கா
முக்கியமான பகுதிகளைக் கீழே சாயமிட்ட வரிகளில் சுட்டி இருக்கிறேன். இந்தச் செய்தியை வலையில் பரப்புவீர்களாயின் தமிழ் மக்கள் கொடுங்கோலர்களிடம் இருந்து தப்பித் தம் வாழ்வுக்குத் தாமே எஜமானர்களாக இருக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்; தமிழக்த்திலாவது ஒரு பொது நன்மை விளையும்.

Asian Godfathers

Money and Power in Hong Kong and Southeast Asia
By Joe Studwell, Atlantic Monthly Press, 328 pp., $26
Reviewed by Cecil Johnson


Madame Tien, wife of former Indonesian President Suharto and partner to her husband in taking kickbacks, picked up the nickname "Madame Tien Percent" in business circles, writes longtime South Asia watcher Joe Studwell in his fascinating new book, Asian Godfathers.

Studwell, founder of the China Economic Quarterly, inserts the Madame Tien tidbit to underscore the degree to which guanxi, a term used to suggest cozy relationships between political leaders and businesspeople in which bribes are often accepted, has long been a core element of economic and political life in Southeast Asia.

The principal beneficiaries of those relationships have been men whom Studwell calls alternatively godfathers and tycoons - a group of billionaires, descended mainly from Chinese immigrants, who since the end of World War II have dominated the domestic economies of Indonesia, Malaysia, Thailand, the Philippines, Singapore and Hong Kong.

"A small region that, concurrently, could not boast a single non-state corporation among the global top 500 nonetheless accounted for a third of the wealthiest two dozen people on the planet. These are the vanguard of the Asian godfathers, each with more than four billion American dollars to his name - the likes of Li Ka-shing, Robert Kuok, Dhanin Chearavanont, Liem Sioe Liong, Tan Yu and Kwek Leng Beng; behind them a phalanx of lesser tycoons, with one, two and three billion dollars of net worth," writes Studwell.

Most readers, lacking the benefit of Studwell's nearly 20 years of reporting in Asia, will not recognize those names and will not find them easy to remember. But Studwell has provided a cast of characters at the end of the book that includes concise profiles of all the godfathers who are prominently mentioned in his narrative and analysis.

That dramatis personae enables readers to jog their memory about the tycoons being singled out when Studwell refers to them in differing contexts in the book.

In using the term godfathers, Studwell does not mean to suggest that all of the tycoons are criminals, although much of their wealth has been accrued from shady practices. He acknowledges that some of the Asian godfathers have been involved in smuggling, including, to a limited extent, people, drugs and weapons.

"A significant minority also is involved in gambling. These activities frequently involve contact with Asia's criminal underworld - Chinese triads, Indonesian preman, and so on - and this is a fact of life that tycoons deal with. But it does not mean they are mafia bosses. Rather, most Asian organized crime inhabits a parallel, but connected, universe to that of the tycoons," writes Studwell.

The author reprises the political and economic history of the subject countries over the last century and a half. He examines the accommodations the godfathers, in most cases acting as representatives of the Chinese immigrant communities, made with ruling indigenous aristocratic elites, colonial governments, Japanese occupiers, and post-World War II governments.

Those arrangements, he points out, gave the tycoons monopolies in certain crucial areas of the economy that caused local populations to pay higher prices for necessities than they would had there been free trade. At the same time, he points out, the tycoons enriched themselves without fostering much in the way of manufacturing for export.

The godfather domination of the Southeast Asian economies, he explains, has resulted in those countries' lagging behind such North Asian countries as South Korea, Taiwan and Japan. It also has fostered an unacceptable level of poverty among the common people while the rich get richer.

That is glaringly true in Hong Kong, he says, pointing out a cognitive disconnect among Hong Kong's superrich and the realities of life among the port city's common people.

Studwell unequivocally rejects Milton Friedman's evaluation of Hong Kong as a bastion of free trade: "Such assertions reflect a focus on Hong Kong's status as a free port with tariff- and exchange-control-free international trade. But Hong Kong's domestic economy, where the godfathers operate, is a different story. It has long been a patchwork of de facto cartels."

He lays much of the blame for the Asian financial crisis of the late 1990s in the laps of the godfathers and predicts that some of those countries, particularly the Philippines, could go the way economically of some fringe Latin American countries if they continue to do business as usual.


Cecil Johnson is a free-lance reviewer. He can be reached at linden35swbell.net. Find this article at:
http://www.philly.com/inquirer/entertainment/books/20071111_How_a_few_superrich_tycoons_dominate_S_E__Asia_economy.html © Copyright 2007 Philly Online, LLC. All Rights Reserved.