August 25, 2007

தேசிய உணர்வைப் பயன்படுத்தும் சீனர்கள் பன்னாட்டு நிறுவனங்களை எப்படி ஏமாற்றுகிறார்கள்

சீனாவில் சாதாரண மக்களாகட்டும், அதிகாரிகளாகட்டும், வியாபாரிகளாகட்டும், தொழிலதிபர்களாகட்டும் - தேசிய உணர்வு தூக்கலாக இருக்கிறது. இதில் அவர்கள் முதலில் மேற்கில் இருந்து பொறி நுட்பத்தை இறக்குமதி செய்யும் முதல் கட்டத்தில் பணிவாக மேற்கின் நிறுவனங்கள் போடும் பல நிபந்தனைகளை ஏற்பதாக நடித்து முதல் கட்டத்தைக் கடந்து விடுகிறார்கள். பிறகு தொழில் நுட்பத்தைக் கற்க் ஆரம்பிக்கும்போதே போட்டி நிறுவனங்களையும், போலிப் போட்டிப் பொருட்களையும் உருவாக்க ஆரம்பிக்கிறார்கள். பிற்பாடு ஒரு கட்டத்தில் முதலையே விழுங்கும் அளவு இந்தப் போட்டிச் சீன நிறுவனங்கள் வளர்ந்த பின் மேலைக் கூட்டாளிக்கு வேட்டு வைக்க முடிவெடுத்துக் குறுகிய காலத்தில் அதை நடத்தியும் விடுகிறார்கள்.
இந்தியாவில் மாறாக பிரிட்டிஷார் காலத்தில் நிறுவப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இன்னமும் நமக்குச் சோப்பு சீப்பு கண்ணாடி, உபயோகமில்லாத 'போஷாக்கு மாவுகள்', மேலும் தலையை வறட்டும் கெமிகல் சுத்திகரிப்பு திரவங்கள் (அதுதான் ஷாம்பூ) என்று ஏராளமான பொருட்களை நம்மிடையே விற்றுக் காசு பண்ணுகிறார்கள். ஒரே ஒரு மாறுதல், இவற்றை விறக நம்மை யே அழகான ஜிங்கிள் எல்லாம் பாடி ஆடி விற்கச் சொல்லி நம்மை பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து சுரண்டுகிறார்கள்.
இதைப் பார்க்கும்போது சீனாவின் அடிவருடிகளான இந்திய இடதுகளின் வழக்கமான புலம்பலான 'தரகு முதலாளியம்' என்பது இந்தியாவில் நிறையவே இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளலாம் போலிருக்கிறது. ஆனால் சீனாவில் தேசியம் என்ற பொய் முகமூடியோடு உலவுவதில் திருட்டு (முதலாளியம்) தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
பன்னாட்டு நிறுவனங்கள் நம்மைக் கொள்ளை அடிப்பதால் நாம் எதிர்ப்பாக அவர்களிடம் பொறி நுட்பத்தைத் திருடி அவர்களுக்கே வேட்டு வைப்பது சரியா? அதைச் சீனர்கள் சீன தேசியம் என்ற பெயரில் சப்பைக் கட்டு கட்டி சமாளிப்பதைப் போல நாமும் செய்ய ஆரம்பிப்பதுதான் நாம் வளர ஒரே வழியா?
அல்லது நம்மால் நம் புத்திக் கூர்மை, சலியா உழைப்பு மேலும் சாமர்த்தியமான உற்பத்திப் பொருள் தேர்வு, மேலும் உற்பத்தி முறைத் தேர்வு ஆகியவற்றால் பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்களை நாமே நிறுவி நடத்தி உலகச் சந்தையில் முதல் நிலையில் இருப்பது முடியுமா?



SPIEGEL ONLINE, 08/24/2007
------------------------------

Public Enemy No. 1: A Chinese Executive Wages War with France's
Danone
---------------------------------------------------------------------

French food conglomerate Danone is embroiled in a bitter dispute with
a Chinese joint venture partner. The quarrel reveals just how fragile
business deals in China still are today.

By Wieland Wagner

You can download the complete article over the Internet at the
following URL:
http://www.spiegel.de/international/business/0,1518,501880,00.html


More about this issue
---------------------------

Red China, Inc.: Does Communism Work After All?
http://www.spiegel.de/international/spiegel/0,1518,465007,00.html

The Coming Competitor: China's Auto Ambitions
http://www.spiegel.de/international/spiegel/0,1518,330431,00.html

China's High- tech Offensive: From Sweatshop to Laboratory
http://www.spiegel.de/international/spiegel/0,1518,393615,00.html

Product Piracy Goes High- Tech: Nabbing Know- How in China
http://www.spiegel.de/international/spiegel/0,1518,402464,00.html