August 29, 2007

பூமி உஷ்ணமாகிறதா- மறுப்பவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரின் பேட்டி

உலகம் உஷ்ணமாகிறது என்று சொல்லி மேற்கில் குறிப்பாக இடது சாரியினரும், ஒரு அளவு மத்திய வர்க்க தன்னார்வ இயக்கங்களும் கூட்டாக முதலாளியம் உலகில் வளர்வதை எதிர்க்க முயல்கிறார்.

இதில் சீனாவின் பெரும் வளர்ச்சி அல்லது ரஷ்யாவின் வளர்ச்சி அல்லது இஸ்லாமிய நாடுகளின் வளர்ச்சியை இக்கூட்டங்கள் அனேகமாக எதிர்ப்பதே இல்லை என்பது அவர்களுடைய அரசியால் சார்பு எத்தகையது என்று விளக்கும்.
ஆனால் சில உண்மையாக இயற்கை வளக் காவல் பற்றிக் கவலைப் படும் சிலராவது இந்த எதிர்ப்பணியில் இருப்பதால் அவர்கள் உலகெங்குமே பொருளாதாரா வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்கள், காடுகள், மலைகள், ஆறுகள், கடல், பலவகை நிலப்பரப்புகள் எல்லாம் அழித்து உருமாற்றி அமைக்கப் படுவதை எதிர்க்கின்றனர்.

சமீப காலங்களில் உலக தட்ப வெட்ப நிலையும், அன்றாட வானிலை நிகழ்வுகளும் தறிகெட்டு இருக்கின்றன என்பது போல ஒரு உணர்வு பல நாட்டு மக்களிடமும் பரவி வருகிறது. இது ஒரு நெடுங்கால சீதோஷ்ண ஏற்ற தாழ்வுகளின் பலன் தானே தவிர மனித எத்தனத்தால் உருவானதல்ல, அதனால் பூமியும் மனித சமுகங்களும் மாற்றி அமைக்கப்படுவதால் தட்ப வெட்ப நிலை சீராக்கப் படுவது நடவாதது என்று வாதிடுவோரும், அதற்கு எதிராக வாதிடுவாருமாக உலக சர்ச்சையே குழம்பிக் கிடக்கிறது.
இதில் உலக உஷ்ணமாவது ஆபத்து, நிறுத்தப் படவேண்டும் என்ற கட்சி மிக்க வலுவாகவும் எதிர் கட்சி ஓரளவு குரல் வலு இல்லாததாகவும் பொது அரங்கில் தெரிகிறது. ஆனால் அமைப்புகளைப் பார்த்தால் அரசியல் அதிகாரம், மேலும் செயல்பாடு, சிந்தனை, மேலும் ஆய்வு ஆகிய அரங்குகளில் உலகம் உஷ்ணமாவதற்கு மனிதச் செயல் காரணமில்லை, உலகம் உஷ்ணமாகிறது என்பதே நிறுவப் படவில்லை என்று வாதிடும் கட்சிக்குத்தான் அதிகாரமும் வசதியும் கூடுதலாக இருக்கிறது.
சோ முன்பு வேறு ஒரு தளத்தில் சொன்ன மாதிரி நிலை. 'மக்கள் கூட்ட்மெல்லாம் ஒரு பக்கம், ஓட்டெல்லாம் ஒரு பக்கம்' என்று தேர்தல் முடிவுகள் முந்தைய நாட்களின் பிம்பத்துக்கு எதிராக அமைந்ததைச் சொன்னார் அவர். அது போல பொது மக்கள் கருத்து எப்பக்கம் இருந்தாலும் உலக அரசியலும், நிறுவனச் செயல்பாடுகளும் உலக உஷ்ணமாவதை ஏற்கத் தயங்குகின்றன.
இதை ஒட்டி உஷ்ணமாவது உண்மையாக இருந்தாலும் நாம் ஏதும் செய்ய் முடியாது, அதை விட அவசரமாகச் செய்யப் பட வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன, அவற்றின் மீது உலகம் கவனம் செலுத்துவது பல மடங்கு மேம்பட்ட விளைவைத் தரும் என்று வாதிடுகிறார் கோபன்ஹாகன் பலகலையைச் சார்ந்த ப்ஜார்ன் லொம்பார்க்.
இந்தப் பேட்டியின் எதிர் நிலையை அடுத்த பதிவில் இடுகிறேன்.
இதைப் படித்து உங்கள் வினையைத் தெரிவியுங்கள்.

சூ.கா
_____________________________________________________________________________________________________

Bjørn Lomborg drives people crazy. The tale of the controversy that swarmed his 2001 book, "The Skeptical Environmentalist," in which the native Dane argued that many environmental problems were overblown, has been widely told. With a few clicks you can read all about his skirmish with the Danish Committees on Scientific Dishonesty and his protracted battle with Scientific American. In a flash you can find his defenders strafing his critics from their libertarian bunkers or congressional offices. When Sen. James Inhofe, R-Okla., wants to back up his claim that global warming is the "greatest hoax ever perpetrated on the American people," or invites somebody to Washington to debate Al Gore, he calls on Lomborg.

Lomborg, 42, rose to infamy by way of a Ph.D. in political science and a love affair with statistics. Today he is an adjunct professor at the Copenhagen Business School and the director of the Copenhagen Consensus Center, where he strives to devise economic solutions to the world's pressing problems. Next week he will storm back into the cultural fray with "Cool It: The Skeptical Environmentalist's Guide to Global Warming," a highly readable asseveration that global warming is not so bad and that Al Gore is an inconvenient truth-stretcher.

http://www.salon.com/news/feature/2007/08/29/bjorn_lomborg/print.html