June 05, 2007

உருவகிக்காமல் சிந்தனை வளருமா? வளராது என்கிறார் இந்த ஆய்வாளர்

உருவ வழிபாடு என்பதை ஒரு கடும் விமர்சனமாக முன்வைத்து இந்து மதத்தை இழிவு செய்பவர்கள் இந்தியாவிலேயே ஏராளம். உருவப்படுத்துதல் என்பதையே எதிர்க்கும் ஒரு மதம் இருக்கிறது. விசித்திரங்களில் மகா விசித்திரம் இந்தக் கோட்பாடு. ஏனெனில் இன்றையத் தேதியில் தொலைக் காட்சி, ஒளிப்படம் என்பன இல்லாது அறிவியல், சமூகவியல், கலை, அரசியல், ஏன் கட்டிடக் கலை கூட நடைபெறாது. என்றாலும் இந்த 7ஆம் நூற்றாண்டின் பழைய கள்ளைப் புத்துணர்வூட்டும் அமுத பானம் என்று அருந்துபவர்கள் இருக்கிறார்கள்.
இந்தக் கட்டுரையைப் படித்தால் நான் சொல்வது புரியும்.

Imagery may be necessary for human imagination. It has been suggested that all the products of the imagination are derived from imagery, following some transformation of the basic imagery. For example, Rutgers' psychologist Alan Leslie, when he worked in London in the 1980s, proposed that imagination essentially involves three steps: Take what he called a 'primary' representation (which, as we have already established, is an image that has truth relations to the outside world). Then make a copy of this primary representation (Leslie calls this copy a 'second-order' representation). Finally, one can then introduce some change to this second-order representation, playing with its truth relationships to the outside world without jeopardising the important truth relationships that the original, primary representation needs to preserve. For Leslie, when you use your imagination, you leave your primary representation untouched (for important evolutionary reasons that we will come onto), but once you have a photocopy of this (as it were), you can do pretty much anything you like with it.

http://www.entelechyjournal.com/simonbaroncohen.htm

சூ.கா

பள்ளி வாசல்/ மசூதிகள் புனித இடங்களில்லை, அவை சமூகக் கூடங்களே

இஸ்லாம் நிறைய மாறுதல்களை அடைந்து வருகிறது. மாறுதல்களில் பல பின்னோக்கியவை. சில ஏற்கனவே இருந்து புதைந்த கருத்துகளை எடுத்து முன்னேற்றம் என்பது போல எடுத்து வைக்கப் படுபவை. இதோ ஒன்று. இவர் பள்ளி வாயில்கள் எல்லாம் எந்தப் புனிதமும் கொண்டவை அல்ல, சமூகக் கூடங்கள், அவை பல சமூகச் செயல்களுக்கு உதவும் இடங்கள் என்பது மறைக்கப் பட்டு விட்டது அல்லது மறுக்கப்பட்டு விட்டது என்கிறார். இது ஏன் என்றால், பெண்கள் அங்கே நுழையக் கூடாது என்று பல நாடுகளில் வழக்கம் இருப்பதை எதிர்க்க உதவும் என்று நம்புகிறார் போலும். அதற்கு மேலே போய் பள்ளி வாயில்கள் அரசியல் கூடங்களே என்கிறார், அது இந்திய அரசியலில் ஒரு விழிப்புணர்வைக் கொணர உதவலாம். இவர் கருத்துகளை எடுத்து முன்வைத்தால் என்ன ஆகும்?

Frankfurter Allgemeine Zeitung 05.06.2007

Sociologist Necla Kelek takes a sceptical view of the planned mosque in Cologne (news story). It is not merely a question of religious freedom or equality, she argues: "Mosques themselves, according to Muslim interpretation, are not religious buildings like churches or synagogues, but rather 'multi-functional buildings.' It's a hushed-up fact. Just like the fact that Islam is not a church. Islam sees itself as not merely a spiritual world outlook, but as a philosophy based on an indivisible unity of daily life, politics and faith. It does not have a binding theological teaching. In this sense, many Islamic associations in Germany serve the function of a religious party, a representative of political interests. That is why the issue of building a mosque cannot be reduced to the question of religious freedom; rather it is a political question."

சுட்டி: http://www.signandsight.com/intodaysfeuilletons/1379.html


உபரி உற்பத்தியும், முதலாளிய வீணடிப்பும்

நம்பிக்கை என்பதைக் கை விடுவது கடினம். ஒரு வேளை அது போகவே போகாதோ என்னவோ. வாழ்வு என்பதே நம்பி இருப்பதை நம்பித்தான் இருக்கிறது. இந்த வைரஸ் நம்புவதை எதிர்ப்பவர்களையும் விட்டு வைப்பதில்லை, மார்க்சிஸ்டுகளும் இதில் சிக்கியவர்கள்தான்.
இன்னமும் நிலப்பிரபுத்துவம், சார்புடைமை என்று நடு 20 ஆம் நூற்றாண்டின் பழுதுபட்ட கோட்பாடுகளை முன்வைத்த வண்ணம் இருக்கிறார்கள். பௌல் பாரன் (Paul Baran) இந்த சார்புடைமையை பழைய மொந்தை மார்க்சியத்தைச் சிறிது புதுப்பிக்க உருவாக்கினார். இது உலகப் பொருளாதாரத்தை விளக்க உதவாது என்று பலர் கை விட்டபின்னரும், சமீபத்தில் இந்தக் குழுவினர் நடத்தும் 'மாத மறுபார்வை' (monthly review) என்ற ஒரு சஞ்சிகையில், ஒருவர் வரிந்து வரிந்து எப்படி இந்தக் கோட்பாடு உலகத்தின் சமீபத்தைய நிலைகளைக் கச்சிதமாகச் சுட்டுகிறது என்று எழுதுகிறார்.
சுட்டி இதோ:

http://www.monthlyreview.org/0507jbf.htm

படித்து விட்டு விமர்சனத்தை எழுதுங்களேன்.
சூ.கா