June 05, 2007

உபரி உற்பத்தியும், முதலாளிய வீணடிப்பும்

நம்பிக்கை என்பதைக் கை விடுவது கடினம். ஒரு வேளை அது போகவே போகாதோ என்னவோ. வாழ்வு என்பதே நம்பி இருப்பதை நம்பித்தான் இருக்கிறது. இந்த வைரஸ் நம்புவதை எதிர்ப்பவர்களையும் விட்டு வைப்பதில்லை, மார்க்சிஸ்டுகளும் இதில் சிக்கியவர்கள்தான்.
இன்னமும் நிலப்பிரபுத்துவம், சார்புடைமை என்று நடு 20 ஆம் நூற்றாண்டின் பழுதுபட்ட கோட்பாடுகளை முன்வைத்த வண்ணம் இருக்கிறார்கள். பௌல் பாரன் (Paul Baran) இந்த சார்புடைமையை பழைய மொந்தை மார்க்சியத்தைச் சிறிது புதுப்பிக்க உருவாக்கினார். இது உலகப் பொருளாதாரத்தை விளக்க உதவாது என்று பலர் கை விட்டபின்னரும், சமீபத்தில் இந்தக் குழுவினர் நடத்தும் 'மாத மறுபார்வை' (monthly review) என்ற ஒரு சஞ்சிகையில், ஒருவர் வரிந்து வரிந்து எப்படி இந்தக் கோட்பாடு உலகத்தின் சமீபத்தைய நிலைகளைக் கச்சிதமாகச் சுட்டுகிறது என்று எழுதுகிறார்.
சுட்டி இதோ:

http://www.monthlyreview.org/0507jbf.htm

படித்து விட்டு விமர்சனத்தை எழுதுங்களேன்.
சூ.கா

No comments: